'மொட்டுக் கட்சியிலிருந்து ஒவ்வொரு இதழாக உதிருகின்றது'

'ஜனாதிபதித் தேர்தல் அண்மிக்கும்போது, மொட்டுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்க்க முடியும்' என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு அங்கத்தவர் வசந்த சமரசிங்க  

'ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதே புரியாதிருக்கின்றது. எதிர்காலத்தில்  இன்னும் பல சம்பவங்கள் இடம்பெறக் கூடும்'

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்கவுடன்  சந்திப்பு

கேள்வி : மாகாண சபைத் தேர்தலை எவ்வாறேனும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார் அல்லவா?  

பதில் : மாகாண சபைகள் 2017ஆம் ஆண்டு தொடக்கம் கலைக்கப்பட்டு வருகின்றன. வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒன்றரை வருடங்களாகின்றன. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக உள்ள இந்நாட்டில் பிரதமர் நாற்காலியில் ரணில் அமர்ந்திருக்கும் அரசாங்கமே தற்போதுள்ளது. தற்போது செய்ய வேண்டியதெல்லாம் நாட்டை நடத்திச் செல்லக் கூடிய மக்களின் நம்பிக்கை உடையவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதற்காக சட்டரீதியாக அரசாங்கத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டியதாகும்.  

கேள்வி : ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தேசிய அரசாங்கத்தை அமைக்க முடியாது போனால் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமென கூறுகின்றார்களே...  

பதில் : முடியாது போனால் என்று கூறுவதிலிருந்து அதன் பின்னணியிலுள்ள அர்த்தம் என்னவென்று விளங்குகின்றதல்லவா? இந்த அரசாங்கம் இரண்டு பக்கமும் இழுக்கும் இரட்டைத் தலை மாடு போலுள்ளது. இங்கே ஜனாதிபதி தற்போது பிணைமுறி மோசடி அறிக்கையை காட்டவில்லை? அதனை பெட்டகத்தில் வைத்திருப்பதில் எவ்விதப் பயனுமில்லை. ஆணையாளர்கள் வழங்கிய பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.பண்டாரநாயக்க மகாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு 33அறிக்கைகளை பெற்றுக் கொடுத்தது. அதில் ஒரு அறிக்கையிலுள்ள பரிந்துரைகளாவது செயல்படுத்தப்பட்டனவா? இன்னும் இந்த அரசாங்கத்தால் மக்கள் தீர்ப்புக்கு எதிராக நடக்க முடியாது. அதனால்தான் பொதுத் தேர்தலுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.  

கேள்வி : நாம் அனைவரும் ஒன்றாக ஒரே பாதையில் பயணிப்போம் என்று கூறிய வாசுதேவ நாணயக்கார அண்மையில் ஊடக சந்திப்பில் பசில் ராஜபக்ஷவை விமர்சித்துள்ளாரே?  

பதில் : திரைக்குப் பின்னால் போர்த் தீ கனன்று கொண்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை முன்னணியில் வைத்திருந்தாலும் அவரால் ஜானதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியாது. கோத்தபாய ராஜபக்ஷ மீது வழக்குகள் உள்ளன. பசில் ராஜபக்ஷ மீதும் வழக்குகள் உள்ளன. நாமல் ராஜபக்ஷவுக்கும் வழக்குகள் உள்ளன.

மஹிந்த ராஜபக்ஷவுடன் உள்ள அதிகம் பேருக்கு வழக்குகள் உள்ளன. சில வழக்குகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன. டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கை விசாரிக்க ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்? தாங்கள் குற்றவாளிகள் இல்லையென்றால் விரைவாக வழக்கை விசாரிக்குமாறு கூறலாம் அல்லவா?எல்லா நெருப்பும் தற்போது எரிகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மொட்டுக்கும் இடையே 'டீல்' போடப்பட்டுள்ளது. அதில் ஒரு முளைதான் மொட்டு கட்சி. மொட்டு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்னும் நிலைமை தோன்றியுள்ளது.

அதன் பிரதிபலிப்பாகத்தான் மாகாண சபைத் தேர்தல் வேண்டும் என கேட்கின்றார்கள். மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் பசிலுடன் உள்ளார்கள்.

மொட்டு பசிலுக்கு சொந்தம். கூட்டணியும் ஸ்ரீல.சு. கட்சியும் மைத்திரிக்குச் சொந்தம், தற்போது அவர்கள் மஹிந்தவுடன் இணைந்து செய்ய முடியாததை பசிலுடன் இணைந்து செய்ய முடியுமாவென யோசிக்கின்றார்கள். பசிலும் மைத்திரியும் ஒன்றுபடும் போது மொட்டு கட்சியில் மோதல் அதிகரிக்கின்றது. மொட்டில் ஒவ்வொரு இதழாக உதிருகின்றது. அது ஒரு போதும் மலராது.   வெல்கம ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். பசில், கோத்தா இன்னொரு பக்கம். ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று மஹிந்த இன்னும் பெயர் குறிப்பிடவில்லை. இந்தப் பிரச்சினை காரணமாக எதிர்காலத்தில் இன்னும் பல சம்பவங்கள் நடக்கும்.  

கேள்வி : உங்கள் கட்சி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நீக்கவே முயற்சி செய்கின்றது. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடைபெற்றால் எதுவித பலனுமில்லையே... 

பதில் : இச்சந்தர்ப்பத்தில் எவ்வாறாயினும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையால் அந்நிலைமயை உருவாக்க வேண்டும். பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். எல்லையில்லா அதிகாரத்தைக் கொண்ட நிறைவேற்று அதிகாரமுள்ள பதவியை நீக்க நாம் எம்மால் முடியுமான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். பொதுத் தேர்தலை பெற்றுக் கொள்வதும் அதற்கு வழிவகுக்கும் ஒரு முறையாகும்.  

கேள்வி : மக்கள் இம்முறை அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதல்லவா?  

பதில் : அரசாங்கம் பொருளாதார நிபுணர்கள் உள்ளார்கள் எனக் கூறுகின்றது. ஆனால் டொலர் 185ரூபா வரை சென்றது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் எங்கேயுள்ளது? அரசாங்கம் வரியும் அபராதமும் விதிக்கும் பொருளாதாரத்தையே உருவாக்கியுள்ளது. அவ்வாறான அரசாங்கத்தினால் எரிபொருள் விலை மாத்திரமல்ல வேறு எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது.

நாம் அரசாங்கத்திடம் அமைச்சர்களில் தெரிந்தவர்கள் யாராவது விலை சூத்திரம் பற்றி விளக்கம் அளிப்பார்களா எனக் கேட்கின்றேன். விலைச் சூத்திரமல்ல எரிபொருள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகளவு வரியே காணப்படுகின்றது.  

(தாரக விக்ரமசேகர)

 

Tue, 02/26/2019 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை