அரசியலமைப்பு சபை குறித்து ஆராய தெரிவுக் குழு தேவை

வாசுதேவ நாணயக்கார

அரசியலமைப்பு சபை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைக்க இருப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார எம்.பி தெரிவித்தார்.

19 ஆவது திருத்தத்தினூடாக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது. உயர் பதவிகள், நீதிமன்றங்கள் என்பவற்றிற்கு நீதிபதிகளை நியமித்தல் என்பன அரசியலமைப்பு சபையினூடாகவே மேற்கொள்ளப்படுகிறது. இந்த சபை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு சபை மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். அரசியலமைப்பு சபை தலைவராக சபாநாயகர் செயற்படுகிறார்.

கடந்த பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் கேள்வி எழுப்ப முயன்றேன். அவர் அரசியலமைப்பு சபையை பாதுகாக்க முயல்கிறார். விஜேதாஸ ராஜபக்‌ஷவும் இந்த சபை தொடர்பில் கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பியுள்ளார். எனவே அரசியலமைப்பு சபை தொடர்பில் விசாரணை செய்ய தெரிவுக் குழு அமைக்க வேண்டும் என்றார். கடந்த ஒக்டோபர் 26 ஆம்திகதி நடந்த ஆட்சி மாற்றத்திற்கு பெஷில் ராஜபக்‌ஷவின் ஆலோசனை பெறப்படாததே பாதியில் குழம்ப காரணம் என சமூக வளைத்தளமொன்றில் கூறப்பட்டிருந்தது. அதனை ஏற்க முடியாது இரு நீதிமன்ற தீர்ப்புகளே இந்த பிரச்சினையை குழப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.(பா)

 

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை