அரச ஊடகங்களை மக்களுக்கான ஊடக நிறுவனங்களாக மாற்ற குழு

அரச ஊடகங்கள் உண்மையான மக்கள் சேவைக்கான ஊடகங்களாக மாற்றுவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அரச ஊடக நிறுவனங்களை உண்மையான பொதுஜன சேவைகள் ஊடகமாக மாற்றும் நோக்கில் அவற்றின் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஊடகப் பாவனை மற்றும் அவற்றின் சுயாதீனத்தன்மை தொடர்பாக சமூகத்தில் தப்பபிப்பிராயம் ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில் ஊடக நிபுணர்களின் கருத்தானது தனியார் ஊடகங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரச ஊடகங்களை உண்மையான பொதுஜன சேவைகள் ஊடக நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்பதாகும். இந் நோக்கை முதன்மையாகக் கொண்டு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் நேற்று (11) எழுவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கமைய அரச ஊடகத்துறை செயல்பாடுகளை ஆய்வுசெய்து தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதே இக்குழுவின் பொறுப்பாகும். இக்குழுவின் தலைவராக விஜயானந்த ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். குழு அங்கத்தவர்களாக பேராசிரியர் ஜயதேவ உயங்கொட, கலாநிதி பிரதீப் வீரசிங்ஹ, நாளக குணவர்தன, கௌசல்யா பெர்ணாந்து, அனோமா ராஜகருணா மற்றும் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை