'ரஹ்மத்'இல்லம் சம்பியனாக தெரிவு

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியின் இவ்வாண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் 'ரஹ்மத்'இல்லம் சம்பியனாக தெரிவாகியது. கல்லூரி அதிபர் ஏ. எம். ஹலீம் மஜீத் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பீ.ஸ்ரீலால் நோனிஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ரஹ்மத்,ஸீனத், இஸ்ஸத் ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையே சகல போட்டிகளும் நடைபெற்றன.

ரஹ்மத் இல்லம் - சிவப்பு நிறம்- 401 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் இஸ்ஸத் இல்லம்-பச்சை நிறம்- 393 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் ஸீனத் இல்லம் - நீல நிறம் - 389 - புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

புவாத் ஜெம்ஸ் அதிபர் எம். ஜே. அஹமட் புவாத் ஹாஜி,பாணந்துறை கோட்டக் காரியாலய கல்விப் பணிப்பாளர் எம்.என்.எச்.டி.பி.டி. சில்வா,களுத்துறை வலயக் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். இல்யாஸ்,பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரபாத் பரனவிதான ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.

ஜீலான் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர்களான ஏ.எஸ்.அஹமட் இஸ்மாயில், எஸ்.எச்.எம். நௌபல், ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, திருமதி மும்தாஜ் பேகம், ஆகியோருடன் இல்மா முஸ்லிம் வித்தியாலய அதிபர் ரிஸ்மி மஹ்ரூப், முன்னாள் காதி நீதவான் பழைய மாணவர் எம்.பி.எம். நிஸ்வான்,அலவிய்யா முஸ்லிம் மகா வித்யாலய பிரதி அதிபர் எஸ்.எச். தாலிப்,அஹதிய்யா அஸ்வர்,எம்.ஜே.எம். ரிஸ்மி,உட்பட ஆசிரியர்கள், பெற்றார்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

மொறட்டுவை மத்திய விசேட நிருபர்

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை