இலங்கையின் முதலாவது நுண் செய்மதி விரைவில் விண்ணில் செலுத்தப்படும்

இலங்கையின் முதலாவது நுண் செய்மதி இவ்வருட நடுப்பகுதியில் விண்ணில் செலுத்தப்படும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.  

இந்த நுண் செய்மதி ஆர்தர் சி கிளார்க் நிறுவனத்தின் ஆய்வு பொறியியலாளர்களான துலானி சாமிக மற்றும் தரிந்து தயாரத்ன ஆகியோரினால் ஜப்பானின் குயூசு தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.இந்த நுண் செய்மதி 400கிலோ மீற்றர் உயரத்தில் செலுத்தப்படவுள்ளது.  

இதேநேரம் 80சதவீத அரச நிறுவனங்கள் தற்போது கணினி மயப்படுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் சேனசிங்க சுட்டிக்காட்டினார்.  

சில்பசேனை என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தனது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் சேனசிங்க விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்பினை அதிகரிப்பதே மேற்படி புதிய திட்டத்தின் நோக்கமன்று அமைச்சர் குறிப்பிட்டார்.  

எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஆய்வுகளுக்கு தனது அமைச்சு முன்னுரிமை வழங்கும் என்றும் அமைச்சர் சேனசிங்க கூறினார்.

Tue, 02/19/2019 - 11:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை