இராணுவத்தினரால் மாணவர்களுக்கு கரப்பந்து பயிற்சி முகாம்

முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக 64 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளின் 310 மாணவர்களுக்கான கரப்பந்து பயிற்சிமுகாம் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் அண்மையில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம்,விஸ்வமடு மகா வித்தியாலயம், சம்பத்நுவர மகா வித்தியாலயம், வித்தியானந்தா கல்லூரி முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம், கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம், தண்ணீர் ஊற்று முஸ்லிம் மகா வித்தியாலயம், முத்துஜயன்கட்டு இடதுகரை மகா வித்தியாலயம், உள்ளிட்ட மாவட்டத்தின் 8 பாடசாலைகளின் 310 மாணவர்களுக்கான கரப்பந்து தொடர்பான விதிமுறைகள் நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இலங்கை இராணுவ கரப்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்களால் கற்பிக்கப்பட்டன.

நிகழ்வில் முல்லைத்தீவு இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு 64 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர 642 வது படைப்பிரிவின் தளபதி கேணல் ரொகான் பொன்னம்பெரும, முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் வலயக் கல்வி பணிப்பாளர்கள் விளையாட்டு உத்தியோகத்தர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்திருந்தனர் .

 மாங்குளம் குரூப் நிருபர்

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை