காபன் வரியின் பின்னணியில் அரசியல் சதி என சந்தேகம்

காபன் வரி அமுல்படுத்தப்பட்டதன் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாமென சந்தேகிப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இந்த வரியின் காரணமாக அரசாங்கம் மீது பழி சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

 ராஜித சேனாரத்ன மன்றத்தி னால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்  அமைப்பினருக்கான கூட்டம் மத்துகமயில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,   காபன் வரி இன்று பெரும் பிரச்சினையாகியு ள்ளது.சுற்றாடல் அமைச்சே காபன் வரியை அமுல்செய்துள்ளது. இந்த அமைச்சு ஜனாதிப தியின் கீழ் தானுள்ளது.காபன் வரியின் காரண மாக மக்கள்,அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

இது சிலவேளை அரசியல் சதியாகக் கூட இருக்கலாம். இதனை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.  

தற்போதைய அரசாங்கத்தில் குறைபாடுகள் உள்ளபோதும், வெள்ளை வேன் கலாசாரம் கிடையாது. வடக்கிலும் அவ்வாறான நிலைமையே காணப்படுகிறது. காணாமல் போதல்கள் தற்பொழுது நடப்பதில்லை. வடக்கிற்கு உண்மையான சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. வடக்கு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.  

நாம் தேசிய அரசாங்கம் அமைத்தாலும் அதன் எதிர்பார்ப்புகளை ஜனாதிபதி அடங்கலான குழுவினர் நாசம் செய்தனர்.  

அரசாங்கம் உருவாக்கிய நாள் முதல் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அதனை விமர்சித்தனர். உள்ளூராட்சி தேர்தல் தோல்விக்கு இது காரணமாக அமைந்தது.53 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடியை தோற்கடித்து தடைகளுக்கு மத்தியில் அரசாங் கம் முன்னேறி வருகிறது.எனது சுகாதார சேவையை சில சங்கங்கள் எதிர்க்கின்றன. 2019 ஆம் ஆண்டில் சுகாதார சேவைக்காக 185 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 4600 பில்லின் டொலர் கடன் மீளச் செலுத்தப்பட்டது.இதில் 85 வீதமானது ராஜபக்‌ஷவினர் பெற்ற கடனாகும். கடனை மீளச் செலுத்துவதற்கு பல நாடுகள் எமக்கு உதவி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.பா

Mon, 02/25/2019 - 09:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை