இலங்கை கிரிக்கெட் அணியில் மடவளை வீரர் மொஹமட் சிராஸ்

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்டடெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் மடவளை மதீனா தேசிய கல்லூரியின் முன்னாள் வீரரும், இளம் வேகப்பந்து வீச்சாளருமான மொஹமட் சிராஸ் முதற் தடவையாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்த்தைப் பெற்றுக் கொண்ட பிறகு தேசிய அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பைப் பெற்றுக் கொண்ட நான்காவது தமிழ் பேசுகின்ற வீரராகவும், முஸ்லிம் வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டுடெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி அடுத்ததாக தென்னாபிரிக்காவுக்கு சென்று 2 போட்டிகள் கொண்டடெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவதுடெஸ்ட் போட்டி டேர்பனில் எதிர்வரும் 13ஆம் திகதிதொடங்குகிறது.

இந்தடெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி கடந்த (05)அறிவிக்கப்பட்டது. இதில் அணித் தலைவர் பதவியிலிருந்து தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் கழகமட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டிய நான்கு புதுமுக வீரர்களுக்கு இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வலதுகை வேகப்பந்து வீச்சாளராக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 23 வயதான மொஹமட் சிராஸ்,தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முதற்தடவையாக அழைக்கப்பட்டுள்ளார்.

முயற்சியைக் கைவிடாமல் போரட்ட குணம் படைத்த ஒரு துடிப்பான இளம் வீரராக மொஹமட் சிராஸை குறிப்பிடலாம். கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையில் இருந்து கிரிக்கெட் விளையாட்டுக்கு பிரவேசித்த அவர்,முதல் தரப் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் முன்னிலை பெற்ற வீரராகவும் திகழ்கிறார்.

இந்தநிலையில்,கடந்தமாதம் கொழும்பில் நடைபெற்றஅயர்லாந்து ஏ அணிக்கெதிரான உத்தியோகபூர்வமற்றடெஸ்ட் தொடரில் முதற்தடவையாக இலங்கை ஏ அணிக்காகவிளையாடியஅவர்,கொழும்பில் நடைபெற்றமுதலாவதுஉத்தியோகபூர்வமற்றடெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுக்களையும்,ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஒருவிக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.

இதன் பிரதிபலனாகதென்னாபிரிக்காவுடனானடெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார்.

கிரிக்கெட் கழகத்திற்காக தற்போது விளையாடிவரும் சிராஸ், இந்தப் பருவகாலத்திற்கான இலங்கை கிரிக்கெட் சபையின் மேஜர் எமர்ஜிங் லீக் முதல்தரக் கிரிக்கெட் தொடரில் இதுவரையில் 14 போட்டிகளில் பங்கேற்று 29விக்கெட்டுக்களை சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் நடைபெற்ற வர்த்தக நிறுவனங்கள் இடையிலான டி-20 கிரிக்கெட் தொடரில் ஜோன் கீல்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய சிராஸ், 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அதேபோன்று,கடந்தவருடம் நடைபெற்ற 23 வயதின் கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் மத்திய மாகாண அணிக்காக விளையாடி 26 விக்கெட்டுக்களுடன் குறித்த தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராகவும் பதிவாகியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, தினகரன் நாளிதழுக்கு மொஹமட் சிராஸ் வழங்கிய விசேட செவ்வியில், முதலில் அல்லாஹ்வுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அல்ஹம்துலில்லாஹ். அதன்பிறகு எனது பெற்றோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் இல்லாவிட்டால் நான் இந்த அளவு தூரத்துக்கு வந்திருக்க முடியாது. என்னை இந்த இடத்துக்கு கொண்டுவருவதற்கு பல கஷ்டங்களையும், துன்பங்களையும் அவர்கள் அனுபவித்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக, நான் தென்னாபிரிக்க தொடருக்காக தெரிவானதைக் கேட்ட எனது தாயார் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லமுடியாது. எனவே என்னை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்க வேண்டும் என கனவு கண்ட எனது தாய்க்கு நான் சந்தோஷத்தைக் கொடுத்து விட்டேன். அதேபோல பாடசாலைக் காலத்தில் இருந்து இதுவரை என்னை வழிநடத்திய அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அத்துடன், தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி இலங்கை அணிக்காக வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தென்னாபிரிக்கடெஸ்ட்

தொடருக்கான இலங்கை அண:

திமுத் கருணாரத்ன (தலைவர்), நிரோ ஷன் டிக்வெல்ல (உப தலைவர்), லஹிரு திரிமான்ன, கௌஷால் சில்வா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, மிலிந்த சிறிவர்தன, தனன்ஜய டி சில்வா, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ பெரேரா, சுரங்க லக்மால், கசுன் ராஜித, விஸ்வ பெர்னாண்டோ,சாமிக கருணாரத்ன,மொஹமட் சிராஸ், லக்ஷான் சந்தகன், லசித் அம்புல் தெனிய

பீ.எப் மொஹமட்

Fri, 02/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை