மட்டக்களப்பில் வெளிநாட்டவர்கள் பங்குகொள்ளும் உல்லாச மேம்படுத்தல் திட்டம்

கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிப்பதற்காக பட்டம் விடும் போட்டி நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையுள்ள ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ளஇப்போட்டியில்200க்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த உல்லாச பயணிகளை பங்குபெறச் செய்து அவர்களினூடாக கிழக்கு மாகாணத்தில் உல்லாச பயணத்துறையை ஊக்குவிப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் அண்மையில் மட்டக்களப்பு ஆளுநர் பணிமனையில் இடம்பெற்றது.

கடந்த ஆண்டை விடவும் இவ்வாண்டு பாசிக்குடா, தொப்பிகல,மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி மட்டக்களப்பில் உள்ள உல்லாச பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும், மட்டக்களப்பின் இயற்கையினை  அறிமுகப்படுத்தும் வகையிலும், இது தொடர்பான விளம்பரங்களை ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களுக்கு வழங்கும் வகையிலும் விஷேட ஏற்பாடு இடம்பெறவுள்ளது.

சகல திணைக்களங்களும் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் ஆளுநர் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இராணுவ,பொலிஸ்,கடற்படை,விமானப்படை உயர் அதிகாரிகள்,ஆளுநரின் செயலாளர்கள்,உல்லாச பயணத்துறை பணிப்பாளர் நாயகம்,மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் பிரதேச சபை தலைவர்கள் பங்கு பற்றலுடன் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Sun, 02/24/2019 - 16:07


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக