தலைவர் சம்மி சில்வா செயலாளர் மொஹான் டி சில்வா

இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக சம்மி சில்வாவும் செயலாளராக மொஹான் டி சில்வாவும் பொருளாளராக லசந்த விக்கிரம சிங்கவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இலங்கை கிரிக்கெட் தேர்தல் நேற்று கொழும்பு 07 ல் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி நண்பகலையும் தாண்டி இடம்பெற்றது.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சம்மி சில்வா 83 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜயந்த தர்மதாச 56 வாக்குகளும் பெற்றனர்.அத்துடன் தலைவர் வேட்பாளராக போட்டியிட்ட மதிவானன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். சம்மி சில்வா மேலதிக 27 வாக்குகளால் வெற்றி பெற்றார்.அத்துடன் செயலாளர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர்.அதில் பந்துல திசாநாயக்க,சம்மி சில்வா ஆகியோர் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டனர்.

செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மொஹான் டி சில்வா 96 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட நிசாந்த ரணதுங்க 43 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

அத்துடன் உப தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர்.அதில் இரண்டு பேர் போட்டியில் இருந்து விலகினர்.இரண்டு பேர் தெரிவாகும் பதவிக்கு ரவின் விக்கிரமரத்ன 82 வாக்குகளையும் மதிவானன் 80 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர்.

ஆனால் இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்ன வென்றால் அரசின் முக்கிய அமைச்சராக திகழும் அமைச்சர் மட்டுமல்ல முன்னாள் கிரிக்கெட் வீரான அர்ஜுன ரணதுங்க 72 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தமை விசேட அம்சமாகும்.

அத்துடன் இன்னுமொன்றை குறிப்பிட வேண்டும் எதிர்த்தரப்பில் போட்டியிட்ட மதிவானன் மாத்திரம் உப தலைவராக தெரிவானமை விசேட அம்சமாகும். உப செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட கிறிசாந்த கப்புவத்தை 94 வாக்குகள் பெற்று வெற்றியீட்டினார்.அத்துடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிரந்த பெரேரா 44 வாக்குகள் பேற்றார்.

ரவின் விக்கிரமரத்ன மற்றும் பந்துல திசாநாயக்க ஆகியோர் போட்டியில் இருந்து விலகினர்.

மற்றுமொரு பதவியான பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட லசந்த விக்கிரம சிங்க 100 வாக்குகள் பெற்று தெரிவானார்,அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்மன் நாராங்கொட 37 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தார்.அத்துடன் உப பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட லலித் ரம்புக் வெல்ல 92 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட செனரத் ஜஞ்சய 42 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 142 கழகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அதில் 140 கழக உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு என நேற்றய தினம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.பல்வேறு சட்டசிக்கல்கள் காரணமாக கடந்த 10 மாதங்களாக நடைபெறாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது

ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதிகளான சந்திரா ஜயதிலக்க தலைமையிலான தேர்தல் செயற்குழு தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. அத்துடன், தேர்தலை மேற்பார்வை செய்வதற்காக இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் 10 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டனர். தேர்தலுக்கான சகலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையம் முன்னெடுத்தது. இதற்காக 100 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பரீத் ஏ றகுமான்

Fri, 02/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை