ஜனாதிபதி தேர்தலே அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு

ரொட்டவெவ குறூப் நிருபர்

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு ஜனாதிபதி தேர்தலே என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாயில் அமைக்கப் படவுள்ள வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  

52நாள் அரசியல் சூழ்ச்சியை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசு மூலம் நாட்டு மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம். கப்பெரலிய திட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த மாதமளவில் ஆரம்பிக்கப்படும்.  நாடு முழுவதும் அமைச்சர் சஜித் பிரதமதாசவால் உதாகம்மான வீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

அடுத்த வரவு செலவு திட்டம் மூலம் பொதுமக்களுக்கு மேலும் பல சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம். ஆகவே இப்போதே மக்களின் மனதை வெற்றிகொள்ளும் திட்டங்களை எமது அரசு முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது என எண்ணுகிறேன்.  

இவ்வாறு அரசின் நடவடிக்கைகள் காணப்பட்டாலும் நாட்டில் காணப்பட்ட அரசியல் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. அரசியல் நெருக்கடி நிறைவுக்கு வர வேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே எமக்குள்ள ஒரே வழி. புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செயப்பாட்டு அவரின் அதிகாரத்தின் கீழ் மாகான சபை, பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படின் மாத்திரமே இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரமுடியும்.  

மஹிந்த, மைத்திரி கூட்டணிக்கு இடையில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினாலேயே அவர்கள் மாகாண சபை தேர்தலை முதலில் நடத்த கோருகின்றனர். தான்தான் அடுத்த வேட்பாளர் என்ற நோக்கிலேயே ஜனாதிபதி செயற்படுகிறார். இப்போது ஏற்பட்ட நெருக்கடிக்கு இதுவே மூல காரணம்.   அடுத்த பக்கம் ராஜபக்ஷ் சகோதரர்களுக்கிடையில் யார் வேட்பாளர் என்பதில் போர் மூண்டுள்ளது. கோடபாய, பசிலுக்கு அமெரிக்க பிரஜாஉரிமை காணப்படுவதால் அவர்களுக்கு போட்டியிடுவதில் சிக்கல் உள்ளது மேலும் குமார வெல்கம போன்றவர்கள் வெளிப்படையாகவே ராஜபக்ஷ் சகோதரர்களை எதிர்கின்றனர்.  

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாமல் அவர்கள் மாகாண சபை பற்றி கதைக்கின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணியில் மக்கள் மனதை வென்ற வேட்பாளர் ஒருவர் உள்ளார்.

Wed, 02/06/2019 - 11:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை