இராஜதந்திர கடவுச்சீட்டுடன் எவரும் கைதாகவில்லை?

இராஜதந்திர கடவுச்சீட்டுடன் எவரும் கைதாகவில்லை?-Theres No one With Diplomatic Passport

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் மாக்கந்துர மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டைக் கொண்டவர்கள் எவரும் இல்லையென உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அளவத்துவல தெரிவித்தார்.

துபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டைக் கொண்ட ஒருவரும் இருப்பதாக கலீஜ் டைம்ஸ் எனும் துபாய் பத்திரிகை செய்தி வெளியாகியிருப்பதாக உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மாக்கந்தர மதூஷுக்கும் தென்பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆயினும் இது தொடர்பில் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, துபாய் கைது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. எனினும், இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்த நபர் கைதுசெய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. அதுவரை எதனையும் கூறமுடியாது என்றார்.

(மகேஸ்வரன் பிரசாத்)

Fri, 02/08/2019 - 17:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை