அணுக் கழிவுகளால் சர்வதேச பிரச்சினை

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நச்சுத் தன்மை கொண்ட அணுக் கழிவுகளை அகற்றுவதில் உலகெங்குமுள்ள நாடுகள் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக கிரீன்பீஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஏழு நாடுகளில் மட்டும்தான் அணுசக்தி நிலையத்தின் அருகிலேயே மக்களுக்கு கெடுதல் நேராத வகையில் முறையான கழிவு சேமிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அனுசக்தி எதிர்ப்பு அமைப்பான கிரீன் பீஸ் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்த அணு சக்தி மின் நிலையங்கள் உள்நாட்டுப் பயன்பாடுகளுக்கென்றே ஆரம்பிக்கப்பட்டு 65 ஆண்டுகள் கடந்துள்ளது. இதன் கடும் ஆபத்து விளைவுகளை ஏற்படுத்தும் இதன் கதிரியக்க கழிவுகளை அப்புறப்படுத்துவதை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு ஏதோ ஒரு நாட்டை மட்டும் குற்றம் சாட்ட முடியாது” என்று கிரீன்பீஸ் ஜெர்மனியைச் சேர்ந்த அணுசக்தி நிபுணர் ஷாவுன் புர்ணி குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவிலான யுரேனியம் ஆலைச் சரக்குகள், சேமித்து வைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கசியும் மணல் கழிவுப் பொருட்கள் மட்டுமே 2011 வரை இரண்டு பில்லியன் தொன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை