பலவீனமான விந்தணுக்களை தடுக்கும் பெண் மனித உடல்

பெண் இனப்பெருக்கப் பாதை மோசமாக நீந்தும் விந்தணுக்கள் இலக்கை எட்டுவதை தடுப்பதன் ஆதாரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

கருப்பை வாயிலில் இருந்து கருமுட்டை வரை விந்தணுக்களின் பயணத்தில் ஒரு தடுப்பு வாயிலாக கருதப்படும் முக்கிய புள்ளியில் வேகமாக நீந்தும் விந்தணுக்களே அனுமதிக்கப்படுவதை சிறு அளவான மாதிரிகள் மற்றும் கணனி வடிவமைப்புகளை பயன்படுத்தி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த இறுக்கமான புள்ளியை வலுவாக நீந்தக்கூடிய விந்தணுக்களாலேயே அடைய முடியும் என்பதோடு பலவீனமானவை பின்தள்ளப்படுவதை மனிதன் மற்றும் காளைகளின் விந்தணுக்களை பயன்படுத்தி ஆய்வு நடத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“அதிக இயக்கம் கொண்ட விந்தணுக்கள் தேர்வு செய்யப்படுவதும் மெதுவான விந்தணுக்களின் அடைவை தடுப்பதுமோ இந்தக் கட்டமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாடாக உள்ளது” என்று இந்த கண்டுபிடிப்பின் தலைமை ஆய்வாளரான நியூ யோர்க் கோர்னல் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியலாளர் அலிரேசா அப்பஸ்பொரன் குறிப்பிட்டுள்ளார்.

திடீரென்று வெளிப்படும் 60 மில்லியனுக்கும் அதிகமான விந்தணுக்களின் கருமுட்டையை நோக்கிய பயணத்தில் அனைத்து தடங்கல்களையும் தாண்டிய ஒரு விந்தணுவே இலக்கை அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை