பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு விரைவில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு சர்வதேச உறவுகள் தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை உபகுழு அடுத்தவாரம் அங்கீகாரம் வழங்கவுள்ளது.

இந்த புதிய சட்டமூலத்தின் பல திருத்தச் சட்டங்கள் உள்ளடங்குவதாக அக்குழுவின் தலைவர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.  

இந்த சட்டமூலத்தை முன்வைப்பதற்கான செயற்பாடுகள் அடுத்த வாரமளவில் முழுமை பெறும் என்றும் அதன் பின் அதனை எந்த நேரத்திலும் விவாதத்துக்கு எடுக்கக்கூடியதாகவிருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.  

சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பின்போது ஏற்படுத்த வேண்டியதிருத்தற் சட்டங்கள் ​தொடர்பாக சர்வதேச உறவுகள் தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை உபகுழு கடந்தவாரம் கூடி விவாதித்தது.  

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு சிவில் சமூகங்களின் உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அக்கறையுள்ள தரப்பினருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர்களிடம் இருந்து கிடைத்த எழுத்து மூலமான கருத்துக்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் சட்ட மா அதிபருக்கும் அனுப்பிவைக்கப்படுமென்று மயந்த திஸாநாயக்க மேலும் கூறினார். சட்டம் மனிதாபிமானம் மிக்கதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் கூறும் வகையிலும் இருக்கவேண்டும்.

Wed, 02/13/2019 - 10:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை