நைஜீரிய தேர்தல் கூட்டத்தில் நெரிசல்: பலரும் உயிரிழப்பு

நைஜீரிய ஜனாதிபதி முஹமது புஹாரியின் தேர்தல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு நகரான போர்ட் ஹார்கோர்டில் உள்ள அரங்கு ஒன்றிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நைஜீரியாவில் வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதோடு ஜனாதிபதி புஹாரி தனது இரண்டாவது தவணைக்காக போட்டியிடுகிறார்.

இந்த பேரணியில் ஜனாதிபதி உரையாற்றிய பின்னர் கூடியிருந்தவர்கள் அரங்கின் மூடப்பட்ட வாயிலை நோக்கி ஒன்று திரண்ட நிலையில் பீதி ஏற்பட்டு நெரிசல் உண்டானதாக உள்நாட்டு செய்திகள் கூறுகின்றன.

“முன்னால் இருப்பவர்களை பின்னால் இருப்பவர்கள் தள்ளியதால் ஏற்பட்ட அழுத்தத்தில் சிலர் கிழே விழுந்து நசுங்கினர்” என்று அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் விபரித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பற்றி உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் இந்த சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாக போர்ட் ஹார்கோர்ட் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை