கிம் - டிரம்ப் சந்திப்பு ஆசியாவில்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் இடையிலான சந்திப்பு ஆசியாவில் ஏதேனும் ஒரு நாட்டில் நடத்தப்படும் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

போர் முனைப்புடன் இருந்த அமெரிக்கா மற்றும் வட கொரிய நாடுகள், கடந்த ஆண்டு சுமூக உறவை எட்டின. இதற்கு கடந்த ஆண்டு ஜூனில் சிங்கப்பூரில் நடைபெற்ற இரு நாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பு வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து டிரம்புடன் மீண்டும் கிம் ஜோங் உன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

அந்த சந்திப்பு நடைபெறும் திகதி, இடம் தெளிவாகாமல் இருந்தநிலையில், ஏதேனும் ஒரு ஆசிய நாட்டில் தான் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை திகதி, இடம் குறித்து இறுதி செய்ய அமெரிக்கா தரப்பில் இருந்து வட கொரியாவுக்கு ஒரு குழு அனுப்பியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை