இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றி

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங் கிலாந்தின் 15 வயதின் கீழ் கடின பந்து கிரிக்கெட் அணிக்கும் பலாங்கொடை இ/ஜெயிலானி தேசிய பாடசாலை 15 வயதின் கிரிக்கெட் அணிக்கும் இடையில் நடை பெற்ற 40 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

கண்டி அஸ்கிரிய சர்வதேச விளையாட்டரங்கில் இப்போட்டி கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 35.1 ஓவர்களில் சகல விக்ெகட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பலாங்கொடை இ/ஜெயிலானி தேசிய பாடசாலை 15 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 25.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெ ற்றது.

இப் போட்டியின் போது பலாங்கொடை இ/ ஜெய்லானி தேசிய அணி தேசிய பாடசாலை கிரிக்கெட் அணியின் தலைவர் எம்.எப். எம்.இஹ்தி சாம் 41 ஓட்டங்களை பெற்றதுடன் 4 விக்கெட்டு களையும் கைப்பற்றினார்.

பலாங்கொடை இ/ ஜெயிலானி தேசிய பாட சாலை அணி அகில பாடசாலைகள் ரீதியில் நடத்தப்பட்ட சிங்கர் நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடத்திய 15 வயதில் கடினபந்து போட்டித் தொடரில் இரத்தினபுரி மாவட்டம் மற்றும் சப்ரகமுவ மாகாண சாம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டதுடன் அகில இலங்கை ரீ தியில் மூன்றாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போட்டித்தொடரில் தேசிய மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற கிரிக்கெட் அணிகளுக்கு இலங்கையில் சுற்றுலா வந்துள்ள இங்கிலாந்து 15 வயதுக்கு கீழ் கிரிக்கெட் அணியுடன் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வா ய்ப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதற் கிணங்க இம் மூன்று அணிகளும் இங்கிலாந்து அணியுடனான போட்டிகளில் போட்டியிடுகி ன் றன. இவ்வடிப்படையிலேயே இங்கிலாந்து மற் றும் இ/ஜெய்லானி தேசிய பாடசாலை ஆ கிய அணிகளுக்கிடையிலான போட்டி இட ம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இரத்தினபுரி மாவட் டத்தில் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் அகில இலங்கை போட்டிகளில் முதல் மூன்றாவது இடங்களில் ஒன்றை வெற்றி கொண்ட ஒரே அணி பலாங்கொடை இ/ ஜெயிலானி தேசிய பாடசாலை கிரிக்கெட் அணியாகும் என்பது குறிப்பி டத்தக்கதாகும்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை