800 ஆண்டு சிலுவை வீரரின் உடல் சேதம்

அயர்லாந்தின் டப்லின் தேவாலயத்தின் நிலவறையில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான சிலுவை வீரரின் உடல் எச்சம் நாசக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

சிலுவை வீரரின் தலை அவரது உடலில் இருந்து நீக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. வருகையாளர்களுக்காக கடந்த திங்கட்கிழமை மாலை தேவாலயத்தை திறந்தபோதே இது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நிலவறையில் இருக்கும் 400 ஆண்டுகள் பழமையான கன்னியாஸ்திரி உட்பட ஏனைய மம்மிக்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த தேவாலயத்தின் நிலவறையை பார்வையிட ஆண்டுதோறும் சுமார் 28,000 பேர் வருகை தருகின்றனர். இந்நிலையில் அந்த நிலவறை எதிர்வரும் காலத்தில் மூடப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிலுவை வீரர் ஒருவரின் விரலை தொடுவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்று புராணக்கதைகள் கூறுகின்றன.

இதற்கு முன்னரும் 1996 ஆம் ஆண்டு இந்த நிலவறை சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை