இந்தோனேசிய தங்க சுரங்கம் சரிந்து 60 பேர் புதையுண்டனர்

இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 60 பேர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சுலாவெசி தீவின் போலாங் மொகொண்டோ என்ற பகுதியில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் உயிர்தப்பியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர். இதில் 13 பேர் மீட்கப்பட்டிருப்பதோடு ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசிய அனர்த்த முகாமை குறிப்பிட்டுள்ளது.

ஸ்திரமற்ற நிலம் மற்றும் சுரங்கம் பல தடவைகள் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டதால் அதன் தூண்கள் விலகி இருப்பதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் பேர் தங்கச் சுரங்கத்தில் இருந்தபோது திடீரென விட்டங்கள் முறிந்து விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என மீட்புப்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“மண் மற்றும் பாறைகளில் 60 பேர் வரை புதையுண்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது” என அந்த முகாமை குறிப்பிட்டுள்ளது.

மலைப்பிரதேசம் ஒன்றில் இரவு வேளையில் உள்ளுர் மக்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் இருப்பதை அங்கிருந்து பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.

சிறு அளவான தங்க சுரங்கங்களுக்கு இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டபோது தொலைதூர பகுதிகளில் அவை பரந்த அளவில் இயங்கி வருகின்றன.

மோசமான கட்டுமானம் மற்றும் நெறிமுறையின்மையால் சிறு சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை