தெனியாய, ஹென்பர் பிரதேசத்தில் 600 கட்டில்களுடன் புதிய வைத்தியசாலை

ஓகஸ்ட் மாதம் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

தெனியாய பிரதேசத்தில் 600 கட்டில்களைக் கொண்டு அமைக்கப்படவுள்ள வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை ஆராயும் விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவின் பங்களிப்புடன் நேற்று (20) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதில் கொடபொல பிரதேச சபை செயலாளர், தேசிய ஒழுங்கமைப்பு திணைக்கள பணிப்பாளர் மற்றும் உதவிப் பணிப்பாளர், சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் உதவிப் பணிப்பாளர், மாத்தறை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் மற்றும் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் உள்ளடங்கலாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தெனியாயவிலுள்ள வைத்தியச்சாலை மிகவும் ப​ைழமைவாய்ந்தது.இதனால் ஹினிதும,மொரவக்க ஆகிய பிரதேச மக்கள் கராப்பிட்டிய மற்றும் மாத்தறைக்கு செல்வ தால்,பல இன்னல்களை எதிர் கொள்கின்றனர். தென் மாகாணத்தின் தேசிய வைத்தியசாலை கரையோர பிரதேசத்திலே அமைந்துள்ளது. வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை விரைவாக திட்டமிட்டு இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

தெனியாய, ஹென்பர் தோட்டதில் இப் புதிய வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு இடம் ஒதுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை