சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை

பகிடிவதைச் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டில் கற்கின்ற மாணவ, மாணவிகளுக்கே இந்த வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த கூறினார்.  

விவசாய பீடாதிபதிக்கு சில தினங்களாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைவாக நடத்தப்பட்ட விசாரணையின் பின் இம்மாணவர்களுக்கு ஒருவாரகால வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  

எவ்வாறாயினும், பகிடிவதைச் சம்பவம் என்ற பெயரில் மாணவர்களை அடக்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சிப்பதாக அப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நிஸ்ஸங்க கமகே கூறினார். 

மேற்படி 54பேரும், புதிய மாணவர்களை நேற்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட விடாமல், சிற்றுண்டிச்சாலையில் தடுத்து வைத்திருந்ததாகவும் நேற்றுமுன்தினம் இரவு அவர்களை பகிடிவதை செய்து துன்புறுத்தியிருப்பதாகவும் பல்கலைக்கழக மேலதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இவர்களுக்கு ஒருவார காலத்துக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

இரண்டாம் ஆண்டு, மாணவர்கள் புதிய மாணவர்களைத் தடுத்து வைத்திருந்த இடத்துக்கு பல்கலைக்கழகத்தின் மேலதிகாரிகள் நேரில் சென்று அம்மாணவர்களிடம் உரையாடினர். இதன்போது அவர்கள் தங்களை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.  இதன்படி விவசாய பீடத்தின் இரண்டாம் ஆண்டில் பகிடிவதையுடன் தொடர்புபட்டவர்களென அடையாளம் காணப்பட்ட 54 பேருக்கு தண்டனையளிக்கும் முகமாக ஒருவார காலத்துக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Sat, 02/16/2019 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை