எகிப்தில் 50 பண்டைய மம்மிக்கள் கண்டுபிடிப்பு

எகிப்தின் டூல்மிக் (கி.மு 305–30) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அந்நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்–ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 குழந்தைகளின் உடல்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதில் சில துணிகளால் மூடப்பட்டிருந்தன, மற்றவை கல் சவப்பெட்டிகளிலோ அல்லது மர பெட்டிகளிலோ பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. 

பதப்படுத்தப்பட்ட இந்த உடல்கள் யாருடையது என்று தெரியவில்லை என எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் “சித்திர எழுத்துகளில் பெயர்கள் இருக்கவில்லை” என்று எகிப்து தொல்பொருள் உயர் கெளன்சிலின் செயலாளர் நாயகம் மொஸ்தபா வசிரி குறிப்பிட்டுள்ளார்.  

ஆனால், இவர்கள் அக்காலகட்டத்தில் அரசில் முக்கிய பதவி வகித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இந்த ஆண்டின் மிகப் பெரிய வரலாற்று ஆவணமாக இந்த மம்மிக்கள் இருக்கும் என்றும், தொடர்ந்து ஆய்வு நடந்து வருவதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.     

Mon, 02/04/2019 - 12:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை