4 வருடங்கள் சிறையிலிருந்த அரசியல் கைதிக்கு பிணை

அரசியல் கைதியாகக் கடந்த 4 வருடங்கள் சிறையிலிருந்த குடும்பப் பெண்ணொருவரை, 25ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணையில் செல்ல  கெப்ரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றம் அனுமதித்தது.

இவர் மீதான வழக்கு விசாரணை ன்று (07) கெப்ரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுப்பட்டபோது வரை பிணையில் விடுவித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை  எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

முல்லைத்தீவு, விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த ரு பிள்ளைகளின் தாயான திருமதி ரவீந்திரன் மதனி (வயது-31) என்பவரே ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பொருட்களை கையாண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில், கடந்த 2014ஆம் ஆண்டு  மார்ச் 10ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ப்பெண்ணுக்கு  எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ப்பெண் மீதான வழக்கு விசாரணைத் தீர்ப்பு  நீதிமன்றத்தில் ன்று வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டபோதும், வழக்கை விசாரித்து வந்த நீதவான் ரி.ஜே.பிரபாகரன் டமாற்றம் பெற்றமையால்,  வ்வழக்குக்கான கோவை தீர்ப்புக்காக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில்   தெரிவிக்கப்பட்டது.

மேலும், ச்சந்தேக நபர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் ஆஜராகியதுடன்,  மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் ஆளுநர் சபையைச் சேர்ந்தவர்களும்  வ் அரசியல் கைதியின் நலன் கருதி நீதிமன்றத்துக்கு சமூகமளித்தனர்.

மன்னார் குறூப் நிருபர்

Thu, 02/07/2019 - 17:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை