கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் 4,000 ரூபாவாக அதிகரிப்பு

முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்​தை 3,000 ரூபா முதல் 4,000 ரூபா வரை அதிகரிக்க கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்களாக சுமார் 4,500 பேர் கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் நியமனத்துடன் கடமையாற்றி வருகின்றனர்.

இந்த ஆசிரியர்களுக்கு கடந்த 8 வருடங்களாக 3,000 ரூபாய் வீதம் மாதாந்த சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.இச் சம்பளம் தமக்கு போதாமை தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஆளுநருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக திறைசேரி,மாகாண கல்வியமைச்சு , நிதி அமைச்சு போன்றவற்றுடன் கலந்துரையாடியதன் பின்னர் அனைவரினதும் இணக்கத்துடன் மாதாந்த சம்பளத்தை 3,000 ரூபாயில் இருந்நு 4,000ரூபா வரை அதிகரிக்க கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைவாக எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4,000 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.

அத்துடன் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவர்களுக்கான பொது வேலைத்திட்டம், ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகளை வழங்குமாறு கல்வியமைச்சுக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

Sat, 02/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை