4வது ஆண்டாக 85வது ‘Battle of the Saints’ டயலொக் ஆசிஆட்டா அனுசரணை

இலங்கையின் பிரதான சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான கொழும்பு 10 இல் அமைந்துள்ள சென். ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு 4 இல் அமைந்துள்ள சென் பீட்டர்ஸ் கல்லூரி ஆகிய அணிகள் தந்தை Maurice J. Legoc கிண்ணத்திற்காக போட்டியிடும் 85வது Battle of the Saints போட்டிகளுக்கு டயலொக் உத்தியோக பூர்வ அனுசரணையாளராக திகழ்கின்றது.

மார்ச் 1ம் மற்றும் 2ம் திகதிகளில் கொழும்பு ஓவல் பி. சாரா ஸ்டேடியத்தில் 85வது வருடாந்த Battle of the Saints போட்டிகள் இடம்பெறவுள்ளது. மற்றும் கிரிக்கெட்டின் ஒருபரபரப்பான Battle of the Saints போட்டியிடுகின்றார்கள். மேலும் புனிதர்களின் போரில் பொதுவாக காட்டப்படும் பெரிய மதிப்புக்கள்,மரபுகள் முன்னிலைப்படுத்தப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை

இந்தவருடம் டார்லி வீதியிலிருந்து துடுப்பாட்டவீரர், பந்துவீச்சாளர், விக்கட் காப்பாளர் என அனைத்து பிரிவுகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்திய அஷோன் டெனியலும் பம்பலப்பிட்டியிலிருந்து துடுப்பாட்டவீரர்,பந்துவீச்சாளர்,விக்கட் காப்பாளர் என அனைத்து பிரிவுகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்திய ரமித் ஜயசேனவும் கலந்துக் கொள்கின்றார்கள்.

இந்த நிகழ்வில் பங்குகொண்ட புனிதபீட்டர்ஸ் கல்லூரியின் Rev. Fr ட்ரெவர் மார்ட்டின் கூறுகையில், இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான புனித ஜோசப் மற்றும் புனித பீட்டர்ஸ் கல்லூரி ஆகியோருக்கிடையிலான போட்டிகடந்த 83 ஆண்டுகளும் பாரம்பரியம் மிக்கதாகவும்,விறுவிறுப்புமிக்கதாகவும் நீண்ட வரலாற்றினை கொண்டதாகவுமே காணப்பட்டுள்ளது. மேலும் இந்தபோட்டியில் கலந்துக்கொள்ளும் இரண்டு அணிக்கும் அணியில் உள்ள வீரர்களுக்கும் எனது ஆசிகளை வழங்குகின்றேன் என தெரிவித்தார்.

எங்களுடைய இரு பள்ளிகளுக்கும் இடையில் இடம்பெறும் போட்டிகள், இலங்கை பாடசாலை கிரிக்கெட் கலண்டரில் நிகழ்ந்தநிகழ்வுகளும் இளம் வயதினருக்கும் மூத்தோருக்கும் மிகவும் முன்னோடியாக இருந்தன. இந்த வருடத்தின் போட்டிகளும் விதிவிலக்கல்ல என சென்.ஜோசப் கல்லூரியின் ரெக்டர் வண.தந்தை Travis Gabrial தெரிவித்தார். மேலும் இத்தனை வெற்றிகரமாக முன்னெடுக்க கை கோர்த்துள்ள டயலொக் ஆசி ஆட்டா நிறுவனத்திற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தபோட்டிகளில் கலந்துக்கொள்ளும் இரண்டு அணி வீரர்களுக்கும் எனது ஆசிகளும் வாழ்த்துக்களும் என தனது உரையில் தெரிவித்தார்.

கொழும்பு 10 இல் அமைந்துள்ள புனித ஜோசப் கல்லூரி இந்தபோட்டி தொடரில் 12 வெற்றிகளை தனதாக்கிக் கொண்டுள்ளது. இவர்களின் இந்த இறுதிவெற்றி 2008ம் ஆண்டு ருவந்தபெர்னாண்டோபுள்ளே தலைமையில் பெற்றுக்கொள்ளப்பட்டதாகும். அதேநேரத்தில் புனித பீட்டர்ஸ் கல்லூரி வினூ மொஹாட்டி தலைமையில் 2016ம் ஆண்டு தகுதி பெற்ற வெற்றியாளராக இருந்தது. இவர்கள் 10 வெற்றிகளை பெற்றுள்ளார்கள். மற்றும் இந்த வெற்றிக் கேடயமானது பாடசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Josephian-Peterite அணிகளுக்கிடையிலான வரையறுக்கப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டிகள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பாடசாலைகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட போட்டிகளில் அதிக ஓவர்களை கொண்டபோட்டியாக இந்த அணிகளுக்கிடையிலான போட்டியே காணப்படுகின்றது. Fr. Peter A Pillai கிண்ணத்திற்கான போட்டி 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதி கொழும்பு சிங்கலீஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. Josephian-Peterite அணிகளுக்கிடையிலான போட்டி1975ம் ஆண்டில் வண.புனித பீட்டர்ஸ் கல்லூரியின் அதிபர் கிளாவர் பெரேரா,மற்றும் சென்.ஜோசப் கல்லூரியின் அதிபர் வண.தந்தை Quintus Fernando ஆகியோரின் தலைமையில் 1975ம் ஆண்டுமார்ச் 16ம் திகதி ஜோசப் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. 1980ம் ஆண்டு josephian 11 வதுபோட்டியில் தலைவராக இருந்து ரோஹன் விஜயசிங்ஹே 50 ஓவர்களை கொண்டபோட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். 50 ஓவர்களைகொண்ட போட்டி அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாகவும் பார்வையாளர்களை ஈர்த்த போட்டியாகவும் அமைந்துள்ளது. இத்தகைய போட்டிகள் இந்தவருடமும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது விதிவிலக்கல்ல. பார்வையாளர்கள் அனைவருக்கும் இது மிகவும் விறுவிறுப்பினை கொண்டபோட்டியாகவும் மறக்‍க முடியாத போட்டியாகவும் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை