2nd Test: SLvSA; தென்னாபிரிக்க நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்

2nd Test: SLvSA; தென்னாபிரிக்க நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்-2nd Test, SLvSA, Toss, Sri Lanka Tour of South Africa, Port Elizabeth

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது.

போர்ட் எலிசபெத் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமானது.

நேற்றுமுன்தினம் (19) இரண்டாவது போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்ட போது, குசல் மெண்டிஸ் கணுக்கால் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், அவர் இன்றைய (21) டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருந்தது. ஆயினும் அவர் இன்றைய போட்டியில் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி, 15 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை
திமுத் கருணாரத்ன (தலைவர்)
குசல் பெரேரா
குசல் மெண்டிஸ்
தனஞ்சய டி சில்வா
நிரோஷன் திக்வெல்ல (வி.கா)
ஓஷத பெனாண்டோ
லஹிரு திரிமான்ன
சுரங்க லக்மால்
விஷ்வ பெனாண்டோ
கசுன் ராஜித
லசித் எம்புல்தெனிய

தென்னாபிரிக்கா
எய்டன் மார்க்ரம்
டீன் எல்கர்
ஹசீம் அம்லா
தெம்பா பவுமா
பfப் டூ பிளசிஸ் (தலைவர்)
குயின்டன் டி கொக் (வி.கா)
வியான் முல்டர்
கேசவ் மஹராஜ்
ககிசோ ரபடா
டேல் ஸ்டேன்
துஆன் ஒலிவியர்

Thu, 02/21/2019 - 14:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை