2nd Test: SLvAUS; ஆஸி 366 ஓட்ட வெற்றி; தொடரை 2-0 என கைப்பற்றியது

Rizwan Segu Mohideen
2nd Test: SLvAUS; ஆஸி 366 ஓட்ட வெற்றி; தொடரை 2-0 என கைப்பற்றியது-2nd Test-SLvAUS-AUS Won by 366 Runs-Seal the Series as 2-0

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 366 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 516 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்று கொண்டது.

இன்றைய (04) நான்காம் நாள் ஆட்டத்தை விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களுடன் ஆரம்பித்து இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாற்றத்தை சந்தித்தது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் தலா எட்டு ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த நிலையில், இரண்டாவது ஓவர் வீசப்பட்ட நிலையில் திமுத் கருணாரத்ன 8 ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்தார்.

அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் 4 ஓட்டங்களையே பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் அதிகூடிய ஓட்டங்களாக 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். லஹிரு திரிமான்ன 30, நிரோஷன் திக்வெல்ல 27, சமிக்க கருணாரட்ன 22, ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அந்த வகையில் இலங்கை அணி 366 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இரு போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என அவுஸ்திரேலிய அணி வெற்றி கொண்டுள்ளது.

போட்டியின் நாகனாக இரு இன்னிங்சிலும் மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய மிச்சல் ஸ்டார்க் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக பெட் கம்மின்ஸ் தெரிவானார்.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 534 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. நேற்றைய (03) ஆட்டத்தின் போது ஜெய் ரிச்சர்ட்ஸன் வீசிய பவுன்சர் பந்து, குசல் பெரேராவின் தலைக்கவசத்தின் தாக்கியதையடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு தற்போது எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

அந்த வகையில் இலங்கை அணிக்கு 516 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், ஏற்கனவே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது..

அவுஸ்திரேலியா 534/5d (132.0)
ஜொ பேர்ன்ஸ் 180 (260)
ட்ரவிஸ் ஹெட் 161 (204)
கேர்டிஸ் பெற்றர்ஸன் 114 (192)

விஷ்வ பெனாண்டோ 3/126 (30.0)
கசுன் ராஜித 1/103 (28.0)
சமிக கருணாரத்ன 1/130 (22.0)

இலங்கை 215/10 (68.3)
திமுத் கருணாரத்ன 59 (95)
லஹிரு திரிமான்ன 41 (105)
குசல் ஜனித் பெரேரா 29 (57)
நிரோஷன் திக்வெல்ல 25 (22)
தனஞ்சய டி சில்வா 25 (63)

மிச்சல் ஸ்டார்க் 5/54 (13.3)
நதன் லயன் 2/70 (24.0)

அவுஸ்திரேலியா 196/3d (47.0)
உஸ்மான் கவாஜா 101 (136)
ட்ராவிஸ் ஹெட் 59 (95)

கசுன் ராஜித 2/64 (13.0)
விஷ்வ பெனாண்டோ 1/43 (11.0)

இலங்கை 149/10 (51.0)
குசல் மெண்டிஸ் 42 (69)
லஹிரு திரிமான்ன 30 (81)
நிரோஷன் திக்வெல்ல 27 (42)
சமிக்க கருணாரத்ன 22 (38)
திமுத் கருணாரத்ன 08 (16)

மிச்சல் ஸ்டார்க் 5/46 (18.0)
பெட் கம்மின்ஸ் 3/15 (3.0)

ஆட்ட நாயகன்: மிச்சல் ஸ்டார்க்
தொடரின் நாயகன்: பெட் கம்மின்ஸ்

Mon, 02/04/2019 - 11:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை