ஐ.எஸ் உறுப்பினர்களின் 27 சிறுவர்கள் ரஷ்யா வருகை

ஈராக்கில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவைச் சேர்ந்த தாய்மாரின் 27 ரஷ்ய குழந்தைகள் ரஷ்யாவை வந்தடைந்துள்ளனர்.

இந்த சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மொஸ்கோவுக்கு அருகில் உள்ள ரமென்ஸ்கொயி விமானநிலையத்தை வந்தடைந்தனர். “27 ரஷ்ய சிறுவர்கள் பக்தாதில் இருந்து தாய்நாட்டை வந்தடைந்தனர்” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 30 சிறுவர்கள் கடந்த டிசம்பரில் மொஸ்கோவுக்கு திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த சிறுவர்களின் தந்தைமார் ஈராக்கு துருப்புகளுடனான மூன்று ஆண்டு ஐ.எஸ் குழுவின் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்யாவின் பல பிராந்தியங்களைச் சேர்ந்த இந்த 27 சிறுவர்களும் 13 தொடக்கம் 10 வயது கொண்டவர்கள் என்று சிறுவர்கள் உரிமைக்கான ரஷ்ய பிரதிநிதி அன்னா குஸ்னெட்சோவா குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ் குழுவுக்கு எதிராக கடந்த 2017 டிசம்பரில் ஈராக் அரசு வெற்றி பிரகடனத்தை வெளியிட்டது.

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை