தென்ஆபிரிக்கா 235 ஓட்டங்கள் இலங்கை 1/49 ஓட்டங்கள்

இலங்கையின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்கள் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 ரி 20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆபிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி தென்ஆபிரிக்க அணியின் மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

அடுத்து வந்த அம்லா 3 ஓட்டங்களில் வெளியேறினார். மார்கிராம் 11 ஓட்டங்களில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் தென்ஆபிரிக்கா 17 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு பவுமா உடன் அணியின் தலைவர் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இருந்தாலும் டு பிளிசிஸ் 35 ஓட்டங்களிலும், பவுமா 47 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைநிலை வீரர்களை வைத்துக் கொண்டு டி காக் 80 ஓட்டங்கள் சேர்க்க தென்ஆபிரிக்கா 59.4 ஓவரில் 235 ஓட்டங்கள் பெற்று சகல விக்கெட்டையும் இழந்தது.இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ராஜித 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி இரண்டு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. அந்தவகையில் இளம் இடதுகை சுழல் வீரரான லசித் எம்புல்தெனிய, இடதுகை துடுப்பாட்ட வீரர் ஒசத பெர்னாந்து ஆகியோர் தமது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கினர்.

அத்துடன் தனது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி போதிய வெளிச்சம் இன்மையால் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக கருணாரத்தன மற்றும் திரிமான்ன களமிறங்கினர்.திரிமான்ன ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

பின்னர் அணியின் தலைவருடன் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஒசத பெர்னாண்டோ இருவரும் முறையே ஆட்டமிழக்காமல் 28,17 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

பந்து வீச்சில் ஸ்டெயின் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இலங்கை அணி 186 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவ்வணியின் 9 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ளன.இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை