துருணு திரிய திட்டம்: இளம் தொழில் முயற்சியாளருக்கு ரூ. 23கோடி கடன் உதவி

AMF

என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்படும் இலங்கை வங்கியின் ‘துருணு திரிய’ கடனுதவியின் கீழ் இம் மாதம் முதல் வாரத்தில் 23கோடி ரூபாவுக்கும் கூடுதலான கடன் இளம் தொழில்முயற்சியாளர்கள் 547பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 14ஆம் திகதி வெளியிடப்பட்ட கடனுதவி திட்டம் தொடர்பாக இலங்கை வங்கியின் முன்னேற்ற அறிக்கையில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இக்கடனுதவித் திட்டத்தின் மூலம் இதுவரையில் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் உள்வாங்கியதாகத் தொழில் முயற்சிக்கடன் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் இளம் தொழில் முயற்சியாளர்கள் கூடுதல் அக்கறை காட்டி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் 86 பேர் கடனுதவி பெற்றுள்ளனர். சப்ரகமுவ மாகாணத்தில் 106 பேர் கடனுதவி பெற்றுள்ளனர். மேல் மாகாண சபை இரண்டாவது இடத்தில் உள்ளது. இம் மாகாணத்தில் 91 பேர் உதவி பெற்றுள்ளனர். தென் மாகாணம் மூன்றாவது இடத்திலுள்ளது. அங்கு 74 பேர் உதவி பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

'துருணு திரிய' இலங்கை வங்கிக் கடன் திட்டம் ஊடாக பட்டதாரிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்சான்றிதழ் கொண்ட சிறியளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு இலகுவான பிணை முறைமையொன்றின் கீழ் இந்தக் கடன் வழங்கப்படுகின்றது.  

Sun, 02/17/2019 - 08:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை