தென்னாபிரிக்கா 222 ஓட்டங்களுக்குள் சுருண்டது

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 222 ஓட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியுடன் டெஸ்ட்,ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் முதலாவதாக இடம்பெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிய‍ை இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்காவின் முதல்முறையாக தொடரை வென்று

வரலாறு படைக்கும் முனைப்புடன் இலங்கை அணி 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நேற்று களம் இறங்கியது. அதன்படி போர்ட்எலிசபெதில் ஆரம்பமான இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற

தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதற்கு அமைய முதலாவதாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 15 ஓட்டங்களுக்குள்மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. எல்கர் 6 ஓட்டத்துடனும், அம்லா மற்றும் பவுமா

எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தென்னாபிரிக்க அணி தொடக்கத்திலேயே தடுமாற ஆரம்பித்தது. இருப்பினும் அணித் தலைவர் டூ பிளிஸிஸ் மற்றும் மர்க்ரம் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தினால் அணியின் ஓட்ட

எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி அதிகரிக்க ஆரம்பித்தது.

எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 73 ஆகவிருந்தபோது டு பிளஸ்ஸி 25 ஓட்டத்துடன் திமுத் கருணாரத்னவின் முதல் ஓவரின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து ஐந்தாவது விக்கெட் 130 ஓட்டத்திலும் (மக்ரம் 60), ஆறவாது விக்கெட் 145

ஓட்டத்திலும் (முல்டர் 09), ஏழாவது விக்கெட் 157 ஓட்டத்திலும் (மஹாராஜ் டக்கவுட்) வீழ்த்தப்பட்டது.

இதேவேளை ஆடுகளத்தில் மறுமுனையில் நின்று டீகொக் நிதானமாக நின்று நிலைத்தாட 9 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரபடா அவருக்கு உறுதியாக அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஓட்டங்களை கடந்தது.

எனினும் டீகொக் 86 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ரபடாவும் 22 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த ஒலிவரும் எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் தென்னாபிரிக்க அணி 61.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ, கசன் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுக்களையும், திமுத் கருணாரத்ன ஒரு

விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதேவேளை தனது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக அணியின்

தலைவர் கருணாரத்தன மற்றும் லகிரு திரிமான்ன ஆகியோர் களமிறங்கினர்.கருணாரத்ன 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஓசத பெர்னாண்டோ திரிமான்னவுடன் களமிறகிங்கி ஆடுவார் என்ற நிலையில் அவர் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றார்.திரிமான்னவுடன் இனைந்தார் மெண்டிஸ் அவரும் தனது வழமையான ஓட்ட எண்ணிக்கையான 16 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து சென்றார்.திரிமான்னவுடன் இரவு நேர ஆட்டக்காரராக கசுன் ராஜித களம் புகுந்தார்.அவரும் ஓட்டம் எதுவும் பெறாமல் களத்தில் உள்ளார் .திரிமான்ன 25 ஓட்டங்கள் பெற்று களத்தில் உள்ளார்.

இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.

Fri, 02/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை