பங்களாதேஷில் 20 ஆயிரம் ஆபாச தளங்களுக்கு தடை

பங்களாதேஷில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.

ஆபாச இணையதளங்களால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறிய அந்நாட்டு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் முஸ்தபா ஜப்பார், ஆபாச இணையத்தைப் பார்ப்பது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

 மேலும் டிக் டோக் செயலியும் தவறான பழக்கத்திற்கு வித்திடுவதாகவும், அதனையும் தடை செய்ய தெற்காசிய நாடுகள் முன்வரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோன்று இந்தியாவிலும் கடந்த ஆண்டு 800க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை