தோப்பூர் கிண்ண 20க்கு 20 கிரிக்கெட் போட்டி பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் சம்பியன்

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தோப்பூர் கிண்ணம் 20க்கு20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் 12 ஓட்டகளால் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவானது.

தோப்பூர் கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபையால் நடாத்தப்பட்ட 25 அணிகள் பங்குபற்றிய இவ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஈஸ்ட் லங்கா - பாலத்தோப்பூர் ஆகிய அணிகள் தெரிவாகி இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (17) மாலை தோப்பூர் அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய பாலத்தோப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.அவ் அணி சார்பாக பௌஸ் முஹமட் பாயிஸ் 68 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

162 என்ற இமாலய வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஈஸ்ட் லங்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக் கொண்டது.இவ் அணி சார்பாக முஹமட் ஹாபீஸ் அதிகபட்ச ஓட்டமாக 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதன்போது தோப்பூர் கிண்ணத்தின் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த பாலத்தோப்பூர் அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதோடு இரண்டாமிடத்தை ஈஸ்ட் லங்கா அணிக்கு 30 ஆயிரம் ரூபாய் பரிசும் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எச்.எம்.எம்.பாயிஸ் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.தாணீஸ், ஏ.எஸ்.றிபாஸ், பீ.டி.ஆப்தீன், ஜெஸீலா குஸைன், சேருநுவர பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.சீ.எ..அன்வர் ,தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஏ.எல்.முபீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை