1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி

Rizwan Segu Mohideen
1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி-1st Test-SLvSA-SL Won-Man of the Match-Kusal Janith Perera at Durban

இறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் டேர்பன் நகரில் இடம்பெற்ற வந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி, ஒரு கட்டத்தில் 110 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இதன்போது 6 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததன் மூலம் இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

கடந்த புதன்கிழமை (13) ஆரம்பமான இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் குயின்டன் டி கொக் 80 ஓட்டங்களையும், டெம்பா பவும் 47 ஓட்டங்களையும், பப் டூ பிளசிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்வ பெனாண்டோ 4 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 51 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணி சார்பில் டேல் ஸ்டேன் 4 விக்கெட்டுகளையும், வேர்ணன் பிலந்தர், ககிசோ ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து 49 ஓட்டங்கள் முன்னிலை வகித்த தென்னாபிரிக்க அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.

பப் டூ பிளசிஸ் 90 ஓட்டங்களையும் குயின்டன் டி கொக் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய 5 விக்கெட்டுகளையும், விஷ்வ பெனாண்டோ 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதனையடுத்து 304 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஒரு கட்டத்தில் 110 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இதன்போது 6 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததன் மூலம் இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தின்போது, குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காமல், பந்து வீச்சாளர் விஷ்வ பெனாண்டோவின் உதவியுடன் பத்தாவது விக்கெட்டுக்காக 78 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தவிர தனஞ்சய டி சில்வா 48 ஓட்டங்களையும், ஓஷத பெனாண்டோ 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணி சார்பில் கேசவ் மஹராஜ் 3 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டேன் மற்றும் துவான் ஒலிவர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன் அடிப்படையில் ஒரு விக்கெட்டினால் இப்போட்டியை வெற்றி பெறுவதற்கு வழிசமைத்த குசல் ஜனித் பெரேரா போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இரு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் இடம்பெறவுள்ளது.

1ஆவது இன்னிங்ஸ்
தென்னாபிரிக்கா 235/10 (59.4)

குயின்டன் டி கொக் 80 (94)
டெம்பா பவுமா 47 (66)
பப் டூ பிளசிஸ் 35 (54)

விஷ்வ பெனாண்டோ 4/62 (17.0)
கசுன் ராஜித 3/68 (14.4)

இலங்கை 191/10 (59.2)
குசல் ஜனித் பெரேரா 51 (63)
திமுத் கருணாரத்ன 30 (59)
லசித் எம்புல்தெனிய 24 (63)

டேல் ஸ்டேன் 4/48 (20.0)
வேர்ணன் பிலந்தர் 2/32 (10.0)
ககிசோ ரபடா 2/48 (12.2)

2ஆவது இன்னிங்ஸ்
தென்னாபிரிக்கா 259/10 (79.1)

பப் டூ பிளசிஸ் 90 (182)
குயின்டன் டி கொக் 55 (62)
டீன் எல்கர் 35 (70)

இலங்கை 304/9 (85.3)
குசல் ஜனித் பெரேரா 153* (200)
தனஞ்சய டி சில்வா 48 (79)
ஓஷத பெனாண்டோ 37 (76)

கேசவ் மஹராஜ் 3/71 (20.0)
துவான் ஒலிவர் 2/35 (16.0)
டேல் ஸ்டேன் 2/71 (18.0)

ஆட்ட நாயகன்: குசல் ஜனித் பெரேரா

Sat, 02/16/2019 - 19:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை