Only T20: SLvNZ; 3 வகை போட்டித் தொடரிலும் இலங்கை தோல்வி

Azaff Mohamed
Only T20: SLvNZ; 3 வகை போட்டித் தொடரிலும் இலங்கை தோல்வி-Only T20-SLvNZ-NZ Won by 35 Runs-Took All Three Series

ரி20 போட்டியும் நியூசிலாந்து வசம்

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான ஒரே ஒரு ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே ஒருநாள் டெஸ்ட் தொடர்களை முழுமையாக இலங்கை அணி இழந்த நிலையில் ஆறுதல் வெற்றியாக ரி20 போட்டியை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்றைய (11) போட்டியை எதிர்கொண்டது.

ஓக்லண்டின் ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

சிறப்பான பந்து வீச்சு மூலம் நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை இலங்கை பந்து வீச்சாளர்கள் குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழக்கச்செய்தனர். 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணியை நிதானமான ஆட்டம் மூலம் ரோஸ் டெய்லர் கெளரவமான நிலைக்கு கொண்டு சென்றார்.

ரோஸ் டெய்லர் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பின்னணியில் ஆடுகளம் நுளைந்த ப்ரஸ்வெல் மற்றும் அறிமுக வீரர் ஸ்கொட் குக்கெலெயின் அதிரடியாக ஆட நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நினைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களைப் பெற்றது. ப்ரெஸ்வெல் 44 ஓட்டங்களையும் ஸ்கொட் குக்கலெயின் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் கசுன் ராஜித 3 விக்கெட்டுகளையும் லசித் மாலிங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

180 எனும் வெற்றி இழக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் முதலாவது விக்கெட்டாக சதீர சமரவிக்கிரம ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஓரளவு சிறப்பாக ஆட எத்தனித்த வேளை அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய திசர பெரேரா 43 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டமிழக்க அதுவரை இலங்கை அணியின் பக்கம் இருந்த வெற்றி வாய்ப்பு நியூசிலாந்து அணியின் பக்கம் சாயத்தொடங்கியது.

அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் யாவரும் பெரிதாக சோபிக்காத காரணத்தினால் இலங்கை 16.5 ஓவர்களில் 144 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. திசர பெரேராவுக்கு மேலதிகமாக குசல் பெரேரா அதிகபட்சமாக 23 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் லோக்கி பேர்குசன் மற்றும் இஷ் ஷோதி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக டக் ப்ரெஷ்வல் தெரிவு செய்யப்பட்டார்.

நியூசிலாந்து 179/7 (20)
டக் ப்ரெஸ்வெல் 44 (26)
ஸ்கொட் குக்லெய்ன் 35 (15)

கசுன் ராஜித 3/44 (4)
லசித் மாலிங்க 2/24 (4)
திசர பெரேரா 1/42 (4)
லக்ஷான் சந்தகன் 1/41 (4)

இலங்கை 144/10 (16.5)
திசர பெரேரா 43 (24)
குசல் பெரேரா 23 (12)

லோகி பேர்குசன் 3/21 (3)
இஷ் ஷோதி 3/30 (3.5)
டிம் சவ்தி 1/21 (2)
ஸ்கொட் குக்லெய்ன் 1/26 (3)
டக் ப்ரெஸ்வெல் 1/19 (2)
மிச்சல் சான்டனர் 1/27 (3)

Fri, 01/11/2019 - 15:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை