சிறந்த கைத்தொழிலாளர்களுக்கு ISO சான்றிதழ்

சிறப்பான முறையில் செயற்படும் கைத்தொழிலாளர்கள் 14 பேருக்கு iso 14001 சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் அண்மையில் கொழும்பிலுள்ள மிலோதா கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது. மேற்படி 14 கைத்தொழில்களில் மூன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட படத்தில் இடமிருந்து வலமாக தேசிய தூய்மை உற்பத்தி கேந்திரத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமந்த குமாரசேன, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் எல். பி. ரதுமலல, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோக, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் கே. எம். எச். ஜி. பண்டார விருதுகளை பெற்ற, கால்டன் சுவீடன் ஹவுஸின் நிதி மற்றும் செயற்பாட்டுப் பணிப்பாளர் மதுஷிகா திரிமான்ன மற்றும் கால்டன் சுவீட் ஹவுஸின் தொழிற்சாலை பணிப்பாளர் சுதத் ஆகியோர்.

Tue, 01/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை