டயகம இந்திய வீடமைப்புத் திட்டம் நாளை திறப்பு

இந்திய அரசின் 150 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் டயகம மேற்கு தோட்டத்தில் தலா ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனி வீடுகளைக் கொண்ட 'ஆபிரஹாம் சிங்ஹோ' புதிய கிராமம் நாளை 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திறந்து வைக்கப்படவுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ' பேண்தகு யுகம் முன்னேற்றத்தின் பலம் - எங்கள் நிலத்தில் எங்கள் வீடு' என்னும் தொனிப் பொருளோடு 150 மில்லியன் ரூபா செலவில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 20 மில்லியன் ரூபா செலவில் மின்சாரம், மலசலகூடம், குடிநீர் மற்றும் போக்குவரத்துப் பாதை முதலான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் பி. திகாம்பரம் தலைமையில் நடைபெறும் திறப்பு விழா நிகழ்வு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின் பங்கேற்புடன் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளனர்.

 

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை