கேகாலை ஹல்ஒலுவ கனிஷ்ட பாடசாலைக்கு ஜப்பான் நிதியுதவி

அடிமட்ட மனித உரிமைகள் பாதுகாப்புக்கான நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் கேகாலை மாவட்டத்திலுள்ள ஹல்ஒலுவ கனிஷ்ட வித்தியாலயத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 14 மில்லியன் ரூபா நிதியுதவியளிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இச்செயற்திட்டத்தின் கீழ் ஹல்ஒலுவ கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்மையடையும் வகையில் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.

வகுப்பறைகள் அடங்கிய தனிக்கட்டிடமொன்றை நிர்மாணித்தல் அதற்கான தளபாடங்களைக் கொள்வனவு செய்தல், பாடசாலை நுழைவாயில் அமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல், நீர் வசதிகளை பெற்றுக் கொள்ளுதல் என்பன இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படவுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் கடந்த 10 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இதில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கீரா சகியமாவும் பாடசாலை அதிபர் பி.டபிள்யு.ஜீ.எம்.என் வல்பொலவும் கைச்சாத்திட்டனர்.

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை