கட்டார்-ஜப்பான் இறுதியில் பலப்பரீட்சை

அரையிறுதியில் ஐக்கிய அரபு இராச்சிய அணி 4-0 தோல்வி

அபுதாபியில் நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான ஆசிய கிண்ண உதைபந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் கட்டார் அணி 4- – 0 என்ற கோல் அடிப்படையில் அபார வெற்றி பெற்றது. ஆனால் தனது நாட்டில் நடைபெற்ற போட்டி என்பதால் ஐக்கிய அரபு இராச்சிய ரசிகர்கள் கட்டார் அணி வீரர்களுக்கு தண்ணீர் போத்தல்கள் சப்பாத்துகளை மைதானத்துக்குள் எறிந்து தங்ளது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

கட்டார் அணி முதன் முறையாக ஆசிய கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

கட்டார் அணி கோல் அடித்த பின்னர் மகிழ்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை போத்தல்கள் எறிந்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

இரு நாடுகளுக்கிடையில் அரசியல் ரீதியான சர்ச்சை இடம்பெற்று வரும் நிலையில் ஐக்கிய அரபு இராச்சிய ரசிகர்கள் கட்டார் தேசிய கீதத்தை சத்தமாக ஒலிக்கச் செய்து அவர்களை நிந்தனைப் படுத்தினர்.

கட்டார் தீவிரவாதத்திற்கு துணை போவதாக அரபு நாடுகள் குற்றம் சாட்டுவது குறிப்பிடத்தக்கது. 2022ம் ஆண்டு கால்பந்தாட்ட உலக கிண்ண போட்டிகள் கட்டாரில் இடம்பெறவுள்மை குறிப்பிடத்தக்கது. கட்டார் அணி காலிறுதிப் போட்டியில் தென்கொரிய அணியை வீழ்த்தியே அரையிறுதிப் போட்டிக்கு தெரிவானது. கட்டார் அணி ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவானது முதல்முறையாகும்.

கட்டார் அணி இறுதிப் போட்டியில் நான்கு முறை கிண்ணத்தை வென்ற ஜப்பான் அணியை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளது. இந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த அல்மஸ் அலி பார்வையாளர்களின் சப்பாத்து வீச்சுக்கு இலக்காகியமை விசேட அம்சமாகும். இந்த போட்டியை காண்பதற்கு 38 ஆயிரம் ரசிகர்கள் வந்திருந்த தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை