பிலிப்பைன்ஸ் பள்ளிவாசலில் கைக்குண்டு வீச்சு: இருவர் பலி

தெற்கு பிலிப்பைன்ஸில் பள்ளிவாசல் ஒன்றின் மீது இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் ஜோலோ தீவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற இரட்டை குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று ஒருசில தினங்களுக்கு பின் நேற்று சம்பொங்கா நகரில் இவ்வாறு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்குள் கைக்குண்டு வீசப்பட்டிருப்பதாக பிராந்திய இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது பள்ளிவாசலுக்குள் உறங்கிக் கொண்டிருந்த இருவரே கொல்லப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸின் பதற்றம் கொண்ட தெற்கின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய முஸ்லிம் சுயாட்சி மின்டானாவோ பிராந்தியத்தை அமைக்க சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருக்கும் நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன.

மின்டானாவோவின் ஸ்திர நிலையை ஏற்படுத்துவது மற்றும் அமைதி செயற்பாட்டுகள் தொடர்பில் தாக்குதல்தாரிகள் அரசை ஆத்திரமூட்டச் செய்வதாக பிலிப்பைன் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடர்டேவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை