டிரம்ப்–கிம் பெப்ரவரி மாத முடிவில் மீண்டும் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையே வரும் பெப்ரவரி மாதம் முடிவில் இரண்டாவது உச்சிமாநாடு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.  

வட கொரிய உச்ச பேச்சுவார்த்தையாளரான கிம் யொங் சோலை வெள்ளை மாளிகையில் டிரம்ப் சந்தித்த பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் வட கொரிய தலைவர் கிம் இடம் இருந்து எடுத்து வந்த கடிதம் ஒன்று டிரம்பிற்கு வழங்கியுள்ளார்.  

கிம் ஜொங் உன் கொடுத்து அனுப்பிய கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இன்னொரு உச்சி மாநாட்டுக்கு இது வித்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த இரண்டாவது உச்சிமாநாடு வியட்நாமில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பை மிகவும் எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு சிங்கபபூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.     

Mon, 01/21/2019 - 11:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை