சகலரும் ஒற்றுமையுடன் வாழும் அரசியல் தீர்வு கிடைக்கட்டும்

இன்று நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும் அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை நாட்டு மக்கள் பெற்றிடவேண்டி இதயச்சுத்தியுடன் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தமது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் எனது உளமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தைத்திருநாள் உழவர் பெருநாள் மட்டுமன்றி 'நன்றியறிதல்' எனும் உயரிய மனப்பாங்கை வெளிப்படுத்துவதுமாகும். இது தமிழ் மக்கள் உலகிற்கு எடுத்துரைக்கும் நலன்மிகு முன்னுதாரணமாகும். இன,மதவேறுபாடுகளை கடந்து சொந்தங்களும்,சுற்றமும் சூழ, அமைதியும்,சாந்தியும், சமாதானமும் நிறைந்து,அன்புபொங்கும் இனிய நன்னாளாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம்.

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு, அதற்கமைய எதிர்க்காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்கள் நீங்கி நலன்களும்,வளங்களும் பெற்று வாழ வேண்டும்.

நாட்டில் நிலவுகின்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மீண்டு அனைவரும் மீள எழுச்சிபெறுவோம். அதற்காக அனைவரும் ஒன்றிணைவோம்.

எனது நீண்ட அரசியல் வரலாற்றில், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்ற எல்லா பதவி நிலைகளில் மட்டுமல்ல,ஒருகௌரவமிக்க இலங்கை பிரஜை என்ற ரீதியில், எனது நடவடிக்கைகள் இன,மத பாகுபாடுகள் அற்றவகையிலும், எமது அன்னைத் திருநாட்டின் பொதுநலன்கள் சார்ந்தனவாகவே இருந்திருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை