இந்தியாவிலிருந்து கடலட்டைகளுடன் வந்த படகு மடக்கிப் பிடிப்பு

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பல இட்சம் ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகளை மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் வைத்து நேற்று திங்கட்கிழமை (14) அதிகாலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மன்னார் கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பயணத்தின் போது சட்ட விரோதமாக பிடித்த கடல் அட்டைகளை மீட்டுள்ளனர். சுமார் 12 பொதிகளைக்கொண்ட கடலட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கடலட்டைகள் 302 கிலோ கிராம் எடை கொண்டது எனவும்,பல இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.

-இதன் போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதோடு, கடல் அட்டைகளுடன் டிங்கி படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஒன்று என்பன கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டுள்ள கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 மன்னார் குறூப் நிருபர்-

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை