மேற்கிந்திய தீவுகள் இமாலய வெற்றி

பார்படோஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி பெற்றது. 

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பார்படோசில் நடைபெற்றது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 289 ஓட்டங்கள் எடுத்தது. ஹெட்மையர் அதிகபட்சமாக 81 ஓட்டங்கள் எடுத்தார். 

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 77 ஓட்டங்களில் சுருண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கேமர் ரோச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி ஹோல்டர்(202), டவ்ரிச்(116) ஆகியோரின் அபார சதத்தால் 6 விக்கெட் இழப்புக்கு 415 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. 

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 628 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஆரம்ப வீரர் ஜென்னிங்ஸ் 14 ஓட்டங்களிலே வெளியேறினார். 

அதன் பின்னர் அரைச்சதம் கடந்த பர்ன்ஸ் 84 ஓட்டங்களிலும், பேர்ஸ்டோ 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களின் விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் கைப்பற்றினார். 

அவரது சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி 246 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 381 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.    

Mon, 01/28/2019 - 14:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை