ஆடவர்,மகளிர் முதல் போட்டிகளில் ஆஸியுடன் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் மோதல்

20க்கு 20 உலககிண்ணம்:

அவுஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் 20க்கு 20 உலக கிண்ண போட்டிக்கான அட்டவணை மற்றும் நடைபெறும் இடங்களை அறிவித்துள்ளது ஐ.சி.சி.இதே வருடம் ஆண்கள்,பெண்கள் உலக கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

20க்கு 20 உலக கிண்ண போட்டிகளின் ஆண்கள், பெண்கள் இறுதிப் போட்டிகள் உலகின் மிகப் பெரிய மெல்பேர்ன் மைதானத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

10 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. 23 போட்டிகள் இடம்பெறுகின்றன.முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகின்றன.முதல் போட்டி சிட்னி மைதானத்தில் இடம்பெறுகிறது.பெப்ரவரி 21ம் திகதி தொடங்கி மார்ச் 8ம் திகதி நிறைவடைகிறது.

அத்துடன் ஆண்களுக்கான போட்டிகள் ஒக்டோபர் 18 ம்திகதி ஆரம்பமாகி நவம்பர் 15 ம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது.

அவுஸ்திரேலிய அணியுடன் ஆரம்ப போட்டியில் பாகிஸ்தான் அணி மோதுகிறது.இந்த ஆட்டங்கள் சிட்னி மைதானத்தில் இடம்பெறும்.இந்த போட்டிகளுக்கான தெரிவுப் போட்டிகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ளன.அத்துடன் சுப்பர் 12 குழுவில் இணைந்து கொள்வதற்காக ஒக்டோபர் 24 ம் திகதி போட்டிகள் இடம்பெறுகின்றன.

அவுஸ்திரேலிய ,பாகிஸ்தான் ,மேற்கிந்திய தீவு மற்றும் நியூசிலாந்து மற்றும் தெரிவுப் போட்டியில் தெரிவாகும் அணியும் இந்த குழுவில் இணைந்து கொள்கின்றன.அத்துடன் நடப்பு சம்பியன் மேற்கிந்தியதீவு அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையிலான போட்டி ஒக்டோபர் 25 ம் திகதி இடம்பெறும்.

இந்தியா,இங்கிலாந்து ,தென்னாபிரிக்கா மற்றும் ஆப்பானிஸ்தான் ஆகிய அணிகளுடன் தெரிவுப் போட்டியில் தெரிவாகும் அணிகளின் ஒரு அணி இந்த குழுவில் இணைந்து கொள்ளும்.

அத்துடன் நான்கு தடவை கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியுடன் நியூசிலாந்து ,இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் ஏ பிரிவிலும் தெரிவுப் போட்டியில் தெரிவாகும் அணி ஒன்றும் இடம்பெறும்.

மேற்கிந்திய தீவு ,இங்கிலாந்து பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா இரண்டாவது தெரிவுப் போட்டியில் தெரிவாகும் அணி பி குழுவில் இணையும்

அத்துடன் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 ம்திகதி மகளிர் இறுதிப் போட்டி இடம்பெறும்.அதேநேரம் ஆண்களுக்கான இறுதிப் போட்டி நவம்பர் 15ம் திகதி இடம்பெறும்.

மகளிர் குழுப் போட்டிகள் (பெப்ரவரி - -21 - மார்ச் -3) இடம்பெறும்.

குழு ஏ: அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இலங்கை, தெரிவுப் போட்டியில் தெரிவாகும் முதல் அணி

குழு பி : மேற்கிந்திய தீவு ,இங்கிலாந்து பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா தெரிவுப் போட்டியில் தெரிவாகும் இரண்டாவது அணி

அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 5ம் திகதியும் இறுதிப் போட்டி மார்ச் 8 ம் திகதி இடம்பெறும்.

அத்துடன் ஆண்களுக்கான தெரிவுப் போட்டிகள் ஒக்டோபர்18 - 23 திகதிகளில் இடம்பெறவுள்ளன.

குழுப் போட்டிகள் (ஒக்டோபர் 24 -முதல் நவம்பர் 8 ம் திகதி வரை நடைபெறும்.)

குழு-1: பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவு, நியூசிலாந்து மற்றும் தெரிவுப் போட்டியில் தெரிவாகும் அணி

குழு-2: இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் , ஆப்கானிஸ்தான் அத்துடன் தெரிவுப் போட்டியில் தெரிவாகும் அணி

அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 11 ம் திகதி மற்றும் 12ம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

அத்துடன் இறுதிப் போட்டி நவம்பர் 15 ம் திகதி இடம்பெறும்.என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை