பாலி தாக்குதலில் மூளையாக இருந்த குற்றவாளி விடுதலை

2002 பாலி குண்டுத் தாக்குதலில் மூளையாக செயற்பட்டவர் என குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் மதகுருவான அபூபக்கர் பஷீர் மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இஸ்லாமிய குழுவான ஜமா இஸ்லாமியாவின் ஆன்மீக தலைவராக நம்பப்படுகின்ற 81 வயதான பஷீர், அச்சேவில் ஆயுதப் பயிற்சி முகாம் ஒன்று தொடர்பில் தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் 2010ஆம் ஆண்டு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.   ஜனாதிபதி ஜொகோ விடோடோவின் இந்த முடிவு குறித்து கவலை வெளியிட்டிருக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்டொக் மொரிஸன், இது தொடர்பில் இந்தோனேசிய அரசை தொடர்புகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.  

2002 ஆம் ஆண்டு பாலி இரவுவிடுதி குண்டு தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.  

தனது தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் சிறை அனுபித்திருப்பதால் பஷீர் விடுவிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அவர் தனது நன்னடத்தைக்கான ஆவணத்தில் கைச்சாத்திடவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.      

Mon, 01/21/2019 - 12:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை