பாடசாலைகளுக்கிடையில் மேசை பந்து போட்டி

கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கேகாலை மாவட்ட மேசை பந்து சம்மேளனத்தின் தலைவருமான கனக ஹேரத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மேசை பந்து போட்டி கடந்த 18,19,20 ஆகிய திகதிகளில் கேகாலை பாலிகா வித்தியாலயத்தின் உள்ளக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த மேசை பந்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் விபரம் பின்வருமாறு,

10 வயதிற்கு கீழ் நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் தமதி கவிந்தியா அம்பலன்கொட தேவானந்த கல்லூரி, ஆண்களுக்கான போட்டியில் ஷபிஹுல்லா அக்ரம் அல்-ஹுதா பாடசாலை.

12 வயதிற்கு கீழ் நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் நவிந்தி செனவிரதன கேகாலை பாலிக்கா வித்தியாலயம். ஆண்களுக்கான போட்டியில் தனுக் லாமசூரிய கொழும்பு ஆனந்தா கல்லூரி.

15 வயதிற்கு கீழ் நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் பிமந்தி  பண்டார கண்டி ஹில்ஹுட் கல்லூரி. ஆண்களுக்கான போட்டியில் சேநூர சில்வா, கொழும்பு ஆனந்த கல்லூரி.

18 வயதிற்கு கீழ் நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் இமேஷா டி.சில்வா அம்பலன்கொட தர்மசோக்க கல்லூரி. ஆண்களுக்கான போட்டியில் பெர்னாண்டோ கொழும்பு விசாகா வித்தியாலயம்.

21 வயதிற்கு கீழ் நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் முத்துமாளி பியதர்ஷனி அம்பலன்கொட தேவானந்தா கல்லூரி. ஆண்களுக்கான போட்டியில் கிஷான் விக்கிரமரத்ன கண்டி விந்தியார்த்த கல்லூரி.

மேற்படி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேகாலை மாவட்ட உறுப்பினரும் கேகாலை மாவட்ட மேசை பந்து சம்மேளனத்தின் தலைவருமான கனக ஹேரத் வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிப்பதையும், இந்நிகழ்வில் அகில இலங்கை மேசை பந்து சம்மேளனத்தின் உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(காவத்தை தினகரன் விசேட நிருபர்)

Mon, 01/28/2019 - 14:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை