இரண்டு சட்டவரைபுகளை சபையில் சமர்ப்பிக்க முடிவு

இயற்கை வாயு கட்டுப்படுத்தல் சபையை அமைக்கவும் ஹைட்ரோ கார்பன் நிதியத்தை ஸ்தாபிக்கவுமென இரண்டு வரைபு மசோதாக்களை சமர்ப்பிக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் கூறினார்.

கதஹம் செவனயில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இயற்கை வாயு, திரவ வாயு மற்றும் அழுத்தப்பட்ட வாயுவின் உற்பத்தி தவிர்ந்த இறக்குமதி, சுத்திகரித்தல், பதப்படுத்தல், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்து, விநியோகித்தல், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றை கடடுப்படுத்தவும் இயற்கை வாயு, மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை வாயு தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பாவனையாளர்களின் அக்கறைகளைப் பாதுகாப்பதுமே இயற்கை வாயு கட்டுப்படுத்தல் சபை அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரம் இயற்கை வாயு, திரவு வாயு மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை வாயுவை நாட்டில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் பெற்றுக்கொள்வதை இது உறுதி செய்யும். அத்துடன் போட்டி ரீதியிலான சந்தையை ஊக்குவிப்பதுடன் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் 1961 ஆம் வருட 28ஆம் இலக்கச் சட்டத்தின் சில ஏற்பாடுகளை நீக்குவதற்கும் இது வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஹைட்ரோ கார்பன் நிதியமானது, இலங்கை கடலில் சேமிப்பில் உள்ள ஆனால் குறைந்து வரக்கூடிய ஹைட்ரோ கார்பனை நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால பரம்பரையினருக்கு நிலையான வருமானத்தை தேடித்தரும் வகையில் பயன்படுத்தவுள்ளது.

அத்துடன் தந்திரோபாய முக்கியத்துவம் பெற்ற உட்கட்டமைப்புகள் மற்றும் சமூக திட்டங்களுக்கான நிதியையும் இது பெற்றுத்தரும்.

 

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை