விவசாய, கமநல சேவைகள் ஊழியர்களின் விடுமுறைகள் இன்று முதல் இரத்து

விவசாய மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்துடன் இணைந்ததாக சேவையாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களதும் விடுமுறையை இன்று (21) முதல் இரத்துச் செய்வதற்கு விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ வீரகோன் தீர்மானித்துள்ளார். 

நாடு முழுவதும் தற்போது பெருந் தொகையான பயிர்கள் படைப் புழுவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதால் விவசாயத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே இச்சந்தர்ப்பத்தில் விவசாயத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் இன்று முதல் தொடர்ச்சியாக வேலைக்கு சமுகமளித்து படைப்புழுவை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு நேரடி பங்களிப்புச் செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

படைப் புழுவின் தாக்கத்தை கட்டுப் படுத்துவதற்கு அவசியமான இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும்  அவற்றை முறைப்படி பயன்படுத்த  அவசியமான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இவ்வேலை திட்டத்தை முன்னெடுப்பதற்காக நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையான ஊழியர்கள் சேவைக்கு அமர்த்தப்பட வேண்டும். எனவே அனைத்து ஊழியர்களதும் அர்ப்பணிப்புடனான சேவை இக்காலப் பகுதியில் நாட்டுக்கு அவசியமாக உள்ளதால் இன்று முதல் அனைத்து விவசாய அதிகாரிகள், ஊழியர்களது விடுமுறையை ரத்துச் செய்யத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.  

Mon, 01/21/2019 - 09:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை